For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும்.. நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Yediyurappa
டெல்லி: கர்நாடகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று என்டிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி, பாஜக வாக்காளர்களில் 3ல் ஒருவர் முன்னாள் முதல்வர் எதியூரப்பா பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதே போல பாஜக வாக்காளர்களில் பாதிப் பேர் எதியூரப்பாவை கட்சித் தலைமை மரியாதையில்லாமல் நடத்திவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

பாஜகவை விட்டு எதியூரப்பா வெளியேறினால், அந்தக் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று 82 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஊழலில் திளைக்கும் கட்சி எது என்ற கேள்விக்கு 58 சதவீதம் பேர் பாஜக தான் என்றும், 42 சதவீதம் பேர் காங்கிரஸ் தான் என்றும் பதிலளித்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி, இப்போது கர்நாடகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜக 12 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி 19 இடங்களில் வென்றிருந்தது.

கடந்த தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ் 11 இடங்களிலும், 3 இடங்களில் மட்டுமே வென்ற கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 5 இடங்களிலும் வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது.

English summary
If parliamentary elections are held now in Karnataka the BJP will win only 12 seats agaist 19 seats it won last time and congress tally will go up to 11 from 6, according to NDTV opinion poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X