Rasi Palan This Week: "காசு பணம் துட்டு மணி மணி".. ரிஷப ராசிக்கு கொட்டும் பணம்
Rishabam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பணம், காசுக்கு தட்டுப்பாடு இருக்காது. நல்ல பண வரவுகள் இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களையும் சாதிக்கும் யோகம் உண்டு. புதிதாக வண்டி, வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு. புதிய கேட்ஜெட்டுகள் வாங்குவது, லாப்டாப் வாங்குவது, நகை மாற்றும் யோகம் உண்டு.
லாபம் கொட்டும்
பணத்தை எங்கேயும் சிக்கவைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சனி, செவ்வாய் லாபத்தில் இருப்பதால் நண்பர்கள் மூலமாக ஏராளமான லாபங்கள் கிடைக்கும். மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும். அன்புத் தொல்லை, அன்புக் கட்டளைகள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. முக்கியமான முடிவுகள், முக்கியமான விஷயங்களில் கவனம் தேவை.
ஆரோக்கியம்
வாரத்தின் இறுதியில் கஜகேசரி உண்டாகிறது. பண வரவுகள் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சளி பிடிப்பது, கண் நோய் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பல், எகிறு, கழுத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. சுக்கிரனின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறது. மனைவி மூலமாக யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பணவரவு
துணையிடம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். அதிகமான முதலீடுகளை செய்வீர்கள். எல்லா விஷயத்திலும் பண வரவு ஏற்படும். பெரிய கெளரவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரிஷப ராசியினருக்கு அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
பிரச்சனைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கூட இருக்கும் யாரால் நமக்கு நல்லது ஏற்படும் என்பது தெரியவரும். பெரிய பலம் ஏற்படும். நிறைய விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. இதுவரை வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். கழிவுப் பாதையில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
வழிபாடு
விஷ்ணு, மாரியம்மன் வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 90 சதவீதமும், பண வரவு 70 சதவீதமும் நன்றாக இருக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications