For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு-சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனையின் குடிநீர் தொட்டி திறந்துகிடந்தது தொடர்பாக, மருத்துவமனை சுகாதார ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள், நர்சிங் மற்றும்பாரா மெடிக்கல் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அகடமி ஆப் கிளினிக் நியூட்ரீசியன்' எனும்பயிற்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராககலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் மையத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.அப்போது அவருடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை, மருத்துவமனை சுகாதாரஅதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

மருத்துவமனையின் பிணவறை, சமையல் கூடம், தண்ணீர் குழாய்கள் மற்றும் மருத்துவமனை வளாகம்முழுவதையும் அமைச்சர் விஜய் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்தார். அப்போது குப்பைகள்மற்றும் கழிவுநீர் அகற்றப்படாமல் உள்ளது குறித்து கேட்டறிந்தார். துப்புரவு பணிகளில்ஈடுபடாத பணியாளர்களை எச்சரித்தார். மேலும் சேமிப்புக் கிடங்கை எலிகள் புகாதவாறுஅமைக்க அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி திறந்த நிலையில், சிலந்திவலைகள் கட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் விஜய், மருத்துமனையின் மூத்தசுகாதார ஆய்வாளர் நிர்மல் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அதன்பிறகு மருத்துவமனை டீன் அறையில் அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளைஉடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம், அமைச்சர்விஜய் தெரிவித்தார். அப்போது மருத்துவமனையில் தட்டுப்பாடாக உள்ள மருந்து பொருட்கள்,அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குமாறு மருத்துவர்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

அரசு பொது மருத்துவமனையில் நடத்திய திடீர் ஆய்வு குறித்து கேட்டதற்கு பதிலளித்தஅமைச்சர் விஜய் கூறியதாவது,

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஆய்வுசெய்து வருகிறேன். இந்த ஆய்வு இன்னும் 10 நாட்கள் தொடரும். ஆய்வு குறித்து அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த சுகாதார துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

சுங்கச்சாவடியில் அமைச்சர் விடிய விடிய சோதனை:

அதே போல சென்னை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே நேற்றிரவு 7 மணிளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிக சுமை ஏற்றிய வண்டிகள், போக்குவரத்து விதி மீறிய வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.11 லட்சம் அபராத தொகை வசூலானது.

இதேபோல் போதிய ஆவணங்கள் இன்றி ஓடிய வாகனங்களையும் பறிமுதல் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். மொத்தம் 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனை அதிகாலை 4 மணி வரை நீடித்தது.

English summary
Minister Vijay suddenly visited Chennai general hospital on yesterday.After 1 hour of visit he he came to know that, hospital drinking water tank was not close. So he order to suspend senior health inspector of the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X