சென்னை அண்ணா நகரின் அடையாளமான "அண்ணா ஆர்ச்" அகற்றம்

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3-வது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்காக அண்ணாநகர் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா ஆர்ச் எனப்படும் 2 நுழைவு வாயில் வளைவுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
முறையாக அனைத்து துறையிடமும் அனுமதி பெற்று சனிக்கிழமை நள்ளிரவு அண்ணா வளைவுகள் அகற்றப்பட்டன. டைமன் கட்டிங் இயந்திரம், ஜே.சி.பி. மற்றும் 100 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் மூலம் இவை அகற்றப்பட்டது. வளைவு ஒவ்வொன்றும் 82 டன் எடை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அப்பகுதிகளில் மின்சார நிறுத்தப்பட்டது. பாதுகாப்பாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு இருந்த அண்ணாசிலையும் அகற்றப்பட்டது. இதேபோல் ஆர்ச்சில் பதிக்கபப்ட்டிருந்த கல்வெட்டுகளும் அகற்றப்பட்டன.
இரு வளைவுகளும் மிகுந்த உறுதியுடன் இருப்பதால் நேற்று இரவே பணிகள் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன.
இந்த அண்ணா வளைவுகளை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications