செப்டம்பர் இறுதிக்குள் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்: மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால்

மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் இதனைத் தெரிவித்ததாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரிநீரை கர்நாடகம் தொடர்ந்தும் திறந்துவிட மறுத்துவருகிறது. இதனால் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் மன்மோகன்சிங் கண்டுகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து உச்சநீதீமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமரின் மெத்தனப் போக்கை கடுமையாக சாடியிருந்தது. அத்துடன் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதியை பிரதமர் அலுவலகம் தீர்மானிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தீர்மானித்தது அறிவித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் மத்திய அரசு காவிரிநதிநீர் ஆணையத்தை இம்மாத இறுதிக்குள் கூட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications