தானே நிவாரண நிதி மோசடி: புள்ளிவிவரத்துடன் தேமுதிக எம்.எல்.ஏ. புகார்- தாசில்தார் சஸ்பெண்ட்
கடலூர்: தானே புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செய்த தாசில்தார் அனந்தராமன் குறித்து ஆதாரத்துடன் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தமிழகத்தை மட்டும் இன்றி புதுச்சேரியையும் தானே புயல் புரட்டிப் போட்டது. இதில் பலரது வீடுகள் தரைமட்டம் ஆனது.
தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,000ம், பகுதியாக பாதித்த வீடுகளுக்கு ரூ.2,500ம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் பண்ருட்டி நகராட்சிக்கு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வார்டு வாரியாக கணக்கெடுத்து, நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வழங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக அனைத்து கட்சியினர் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற ஆதாரத்துடன் தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்து தாசில்தார் அனந்தராமன் மீது புகார் கொடுத்தனர்.
கலெக்டர் நடத்திய விசாரணையில், புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்த (தற்போது கடலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி தனி தாசில்தார்) அனந்தராமனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications