23 இந்திய ஊழியர்களுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை மீட்டது நைஜீரிய கடற்படை
டெல்லி: 23 இந்திய ஊழியர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட எண்ணெய் கப்பலை நைஜீரிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
துபாய் நாட்டின் பயோனியர் ஷிப் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் அபுதாபி ஸ்டார் எண்ணெய் கப்பல் 23 இந்திய ஊழியர்களுடன் நைஜீரிய கடற்பரப்பில் வந்து கொண்டிருந்தது. அப்போது அக்கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது ஊழியர்களில் ஒருவர் துபாயில் உள்ள கப்பல் நிறுவனத்துக்கு கடத்தப்பட்ட தகவலைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நைஜீரிய நாட்டு கடற்படைக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலை சுற்றி வளைத்த நைஜீரிய கடற்படை பாதுகாப்பாக மீட்டனர். நைஜீரிய கடற்படை சுற்றி வளைத்த போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். தற்போது அந்த கப்பல் லாகோஸ் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லபப்ட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications