பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தருக – வைகோ
மதுரை: சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிவகாசி, சாத்தூர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மருத்துவமனையில் சென்று வைகோ சந்தித்துப் பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பட்டாசுத் தொழிற்சாலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார். தொழிற்சாலை நிறுவனங்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினாலேயே விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications