வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் மரணம்

ஆனந்த் நகரில் குரியனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வயோதிகம் காரணமாக குரியன் மரணமடைந்துள்ளதாகவும். அவருக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சோதி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகலில் குரியனின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் குரியன் ஆழார். உலகின் மிகப் பெரிய பால் வளர்ச்சித் திட்டத்தை அவர்தான் உருவாக்கினார். அதற்குப் பெயர் ஆபரேஷன் பிளட் - Operation Flood - என்பதாகும்.
மேலும் ஆனந்த் நகரில் அவர் உருவாக்கிய பால் வளர்ச்சித் திட்டம் இந்தியாவில் பெரும் பால் வளப் புரட்சியை உருவாக்கியது. மேலும், இந்தியாவை பால் உற்பத்தியில் முலிடத்திற்குக் கொண்டு வந்த பெருமையும் குரியனையேச் சாரும். இன்று நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சந்தைகள் உள்ளன. 2 கோடி லிட்டர் பால் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்ககது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் குரியன்தான்.
1949ம் ஆண்டு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அரசு வேலையை விட்டு விட்டு கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டில் குதித்தார் குரியன். அன்று முதல் அவரது கடுமையான உழைப்பு காரணமாக 50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது. இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமுல் பிராண்ட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு பால் பண்ணைகள் இன்று ரூ. 10,000 கோடி என்ற அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. பால், வெண்ணை, நெய், தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரீம், சாக்லேட் உள்பட பல பொருட்களை அமுல் தயாரிக்கிறது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் 30 லட்சம் விவசாயிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது அமுல்.
அமுல் பிராண்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த பால் உற்பத்தி மாடல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின், நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல பிராண்டுகள் நடைமுறைக்கு வந்தன.
இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க குரியன்தான் முக்கியக் காரணம். இதனால்தான் அவரது திட்டம் வெண்மைப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
தான் உருவாக்கிய வெண்மைப் புரட்சி எழும்பிய இடமான குஜராத் மாநிலத்திலேயே கடைசி வரை வாழ்ந்து மறைந்துள்ளார் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications