நாமக்கல் நகராட்சியின் அலட்சியம்.. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் நடைமேடை

பயணிகள் விரைவாக செல்லும் வசதிக்காக நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நேரு பூங்கா முன்பு பல லட்ச ரூபாய் செலவில் நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலும் கிராமம் சூழ்த பகுதி என்பதால், நாமக்கல் நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருது செல்கின்றனர். ஒரு புறம் இருந்து மறு புறம் செல்ல பல நிமிடம் காத்திருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க பேருந்து நிலையம் முன்பு நடை மேடை (பிளாட்பார்ம்) அமைக்க நாமக்கல் நகராட்சி நிர்வாகம முடிவு செய்தது. அதன்படியே நடை மேயும் அமைக்கப்பட்டது.
ஆனால், அந்த நடை மேடை முன்பு கழிவு நீர் குட்டை போல் தேங்கிக் கிடப்பாதல், அந்த இடத்தில் துர் நாற்றம் வீசுகின்றது. இதனால் அந்த பகுதிக்கு செல்லவே பொது மக்கள் பலரும் தயங்குகின்றனர். மேலும் நடை மேடையையும் பயன்படுத்த மறுக்கின்றனர். இதனால் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அந்த நடை மேடை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணமாக பலரும் கை காட்டுவது நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தைத் தான். நகராட்சி நிர்வாகம் தனது அலட்சிய போக்கை கைவிட்டு, பொது மக்கள் நலன் கருதி விரைவான நடவடிக்கை எடுத்து உதவ வேண்டு என்பது பொதுமக்களின் கோரிக்கை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications