கூடங்குளம் பிரச்சனை: தனித் தீவான கடற்கரை கிராமங்கள்

கூடங்குளத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த தகவல் பரவியதும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் கடும் பதற்றம் நிலவியது. அங்கிருந்து விரைந்து வந்த ஆண்கள் சாலைகள் முழுவதும் கற்களை போட்டு போக்குவரத்தை தடை செய்தனர். இடிந்தகரையில் இருந்து வைரவிகிணறு செல்லும் சாலையில் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதேபோல் இடிந்தகரைக்குள் செல்லும் நுழைவு வாயில் அருகே உள்ள சாலையின் இருபுறமும் கடப்பாறையால் தோண்டி சிதைக்கப்பட்டது. மேலும் முற்களை போட்டும் சாலைகளை அடைத்து வைத்துள்ளனர். பல இடங்களில் கற்களை போட்டு தடை செய்துள்ளதால் யாரும் இடிந்தகரைக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாத சூழல் நிலவுகிறது.
இதனால் வாகன போக்குவரத்து இன்றி இடிந்தகரை கிராமம் முற்றிலும் தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகம், அதன் அருகே உள்ள விஏஓ அலுவலங்களை சூறையாடிய போராட்டக்குழுவினர் அவைகளுக்கு தீ வைத்தனர். போராட்டக்குழுவினரை விரட்டியடிக்க போலீசாரும் தொடர்ந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியவாறு இருந்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் டயர்களுக்கு தீ வைத்து அவற்றை போலீசாரை நோக்கி வீசி எறிந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கடலோர கிராமங்களில் அரசு பஸ்கள், லாரிகள் மீது போராட்டக்குழு ஆதரவாளர்கள் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்து வருகிறது. இதனால் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நிலைமை சீரான பிறகு போக்குவரத்து செயல்படுத்தப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications