நெல்லை அருகே ஜெயலலிதா, நாராயணசாமி உருவப் படங்கள் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியதாழை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர்களது உருவப் படங்களை எரித்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் பெரியதாழையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா மற்றும் நாராயணசாமி ஆகியோரின் உருவப்படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் கூடங்குளம் அணு உலை வேண்டாம், போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற வேண்டும், அணு உலையில் எரிபொருள் நிரப்பக் கூடாது போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு எம்ஜிஆர் சிலையில் இருந்து புறப்பட்டு தெருக்கள் தோறும் ஊர்வலமாக சென்றனர். மேலும் அவர்கள் ஊருக்குள் போலீசார் நுழைவதை தடுக்க கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+