டெக்கான் சார்ஜர்ஸ் தடை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தடை: மும்பை உயர்நீதிமன்றம்

ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த அணிகளுள் ஒன்று டெக்கான் சார்ஜர்ஸ். கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த 5வது ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பங்கேற்றது. ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த அணி நிர்வாகம், ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் திணறியது.
இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. இதில் கலந்து கொண்ட நிறுவனம் கேட்ட ரூ.900 கோடியும், நிபந்தனையும் ஒத்துவராததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கு சம்பளம் அளிக்க, இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த காலகெடு முடிவடைந்த நிலையில், ஐபிஎல் ஆட்சிமன்ற குழு சென்னையில் அவசர கூட்டத்தை கூட்டியது. அதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் குழுவின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியம், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது சட்டத்துக்கு விரோதமானது. எனவே அணி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதி காதவாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அகமதாபாத், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்ட அணிகளை உருவாக்க டெண்டர் வெளியிட முடிவு செய்துள்ளோம். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக புதிய டெண்டர் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். தற்போதைக்கு இதே நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications