அன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்விந்த் கெஜ்ரிவால்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தாம் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்காக எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று அன்னா ஹசாரே உத்தரவு போட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேயின் அறிவிப்பு குறித்து தமது ஆதரவாளர்களுடன் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் அன்னா ஹசாரேவை மிகவும் மதிக்கிறோம். அவர் எங்களுக்கு குரு. தந்தை போன்றவர். அவரது இந்த முடிவு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. ஆச்சரியமளிக்கிறது. எதிர்பாராதது என்றார்.
மேலும் அன்னா ஹசாரேவின் புகைப்படமும் அவரது பெயரும் எங்களது நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. அவரது பாதம் தொட்டு நாங்கள் ஆசீர்வாதம் பெறுவோம். எங்கள் கட்சிக்கு அன்னா ஹசாரேவின் ஐந்து கொள்கைகள்தான் அடிப்படை என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications