ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு- தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தலமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம், திருச்சி, சேலம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications