நடுரோட்டில், இரவு-பகலாக, 40 மணி நேரம் போராடி ராஜபக்சேவை அலறடித்த வைகோ!
இரவில் கொட்டும் பனி, பகலில் சுட்டெரிக்கும் வெயில் இதை எவற்றையும் பொருட்படுத்தாமல் சாஞ்சிக்கு வரும் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடினார் மதிமுக பொதுச் செயலாளார் வைகோ.
அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், உள்ளூர் இளைஞர்களும் அமர்ந்திருந்தனர். சாலையின் இரு பக்கமும் தொண்டர்கள் அமர்ந்திருக்க இரண்டடி இடைவெளியில் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பிரதேச போலீசார் அமர்ந்திருந்தனர். இதனால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.
"மலரட்டும் மலரட்டும் தமிழ் ஈழம் மலரட்டும்", "வாழ்க வாழ்க பிரபாகரன் வாழ்கவே", "சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை ஏற்றுவோம்" உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய வைகோ, தமிழர்களையும், தமிழினத்தையும் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு இங்கிருந்தே கறுப்புக் கொடி காட்டுவோம் என்று கூறினார்.
இதனையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் ராஜபக்ஷேவின் போஸ்டர்களை கையில் வைத்துக்கொண்டு ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
ராஜபக்சே சாஞ்சியில் அடிக்கல் நாட்டும்போது வைகோவும் தொண்டர்களும் திட்டமிட்டபடி மாநில எல்லையில் இருந்தே கருப்புக்கொடி காட்டினார்கள். பின்னர் ராஜபக்சேவின் உருவப் பொம்மையை எரித்தனர். மதிமுக தொண்டர்களும் தங்களின் கைகளில் வைத்திருந்த ராஜபக்சேவின் போஸ்டர்களை எரித்தனர்.
இதனையடுத்து வைகோவையும், அவருடன் இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் மத்தியப் பிரதேசப் போலீசார் கைது செய்தனர்.
தமிழினக் கொலையாளி ராஜபக்சே இந்தியாவிற்குள் எங்கு வந்தாலும் எதிர்ப்போம் என்று சொன்ன வைகோ, சொன்னதோடு மட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக போராடி தமிழர்களின் மனங்களை கொள்ளை கொண்டார் என்றால் மிகையாகாது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!













Click it and Unblock the Notifications