பணம் மரத்தில் காய்க்கவில்லை.. வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகள் அவசியம்: மன்மோகன் சிங்

ரூ. 5 உயர்த்திய பிறகும் ஒரு லிட்டர் டீசலின் விலை இறக்குமதி விலையைவிட ரூ. 13.86 குறைவாகவே இருக்கிறது. மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 32.70 குறைவாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு ரூ. 347 குறைவாக விற்கப்படுகிறது. இதையெல்லாம் சமாளிக்க ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கும் மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்.
அதே சமயம், பெட்ரோல் மீதான ரூ.5 மதிப்பிலான வரியைக் குறைத்துள்ளோம். ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் கோடிக் கணக்கான நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு செய்தோம். சமையல் எரிவாயு சிலிண்டரைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். புதிய விதிமுறையினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் என்பது உறுதி. அதற்கு மேல் பயன்படுத்தினால் அவர்கள் கூடுதல் விலை தந்தே ஆக வேண்டும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து இருப்பதால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது ஆகும். பெரு நகரங்களில் வணிக வளாகங்கள் அதிகரித்து இருப்பது போல் சிறிய கடைகளும் பெருகி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் அனைவருக்குமே வாய்ப்புகள் உண்டு.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் விவசாயிகள் பயன் அடைவார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், நவீன போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் 50 சதவீத முதலீட்டை மேற்கொள்ளும். இதனால் காய்கறிகள், பழங்கள் ஆகியவை சேதம் அடைவது தடுக்கப்படும். இது விவசாயிகளுக்கு மட்டும் இன்றி நுகர்வோருக்கும் பலன் அளிப்பதாக அமையும்.
முதலீட்டுக்காக ...
1991ல் நாடு பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்தபோது யாருமே நமக்கு சிறு தொகையைக் கூட கடனாகத் தர முன்வரவில்லை. (இதனால் நமது நாட்டின் தங்கத்தை வெளிநாட்டில் அடகு வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது)
இதையடுத்து கடுமையான, உறுதியான முடிவுகளை எடுத்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டோம். அந்த நடவடிக்கைகளின் சாதகமான பலன்களை நீங்கள் இப்போதும் பார்க்கலாம். இன்று நாம் அந்தச் சூழ்நிலையில் இல்லை.
நமது பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் முன் சில சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் எடுத்தே ஆகவேண்டும். அதைத்தான் மத்திய அரசு செய்து இருக்கிறது.
இப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மேலும் விலைவாசி கடுமையாக உயரும். பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்யத் தயங்குவார்கள். வெளிநாடுகளில் நமது நிறுவனங்கள் கடன் பெற முடியாது. வட்டி விகிதம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
பணம் என்பது மரத்தில் காய்க்காது. சரியான சமயத்தில் சரியான நடவடிக்கைகளை நாம் எடுக்க தவறினால் நமது நிதிப்பற்றாக்குறை மிகவும் அதிகரித்து விடும். அதை தவிர்க்கவும் அரசாங்கத்தின் வருவாயை பெருக்கவும் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதாரண மக்களின் நலனில் அக்கறை கொண்டு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. நாட்டில் வறுமை குறைந்து, விவசாயத்துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்து இருக்கிறது.
சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஐரோப்பிய நாடுகள் இப்போது பெரும் நிதிச் சிக்கலில் உள்ளன. மற்றவர்களின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். ஊதியக் குறைப்பு, ஓய்வூதியக் குறைப்பு செய்து கடன் தருபவர்களைத் திருப்திப்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவை அந்த நிலைமைக்குத் தள்ள நான் விரும்பவில்லை. ஆனால் இந்நிலைமையை உங்களுக்குப் புரிய வைத்தால்தான் நான் எனது நோக்கத்தில் வெற்றி காண முடியும்.
இந்த மாபெரும் தேசத்தின் பிரதமர் என்ற முறையில் நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கரங்களை பலப்படுத்த முன்வாருங்கள். அப்போதுதான் வளர்ச்சி நடவடிக்கைகளை அரசாங்கத்தால் முன்னெடுத்து செல்வதோடு நமக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார் மன்மோகன் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications