மமதாவுக்கு பதிலடி: மே.வங்க கூட்டணி அரசிலிருந்து இன்று காங்கிரஸ் விலகுகிறது
கொல்கத்தா: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் திரும்பப் பெற்றதற்கு பதிலடியாக மேற்கு வங்க கூட்டணி அரசிலிருந்து காங்கிரஸ் இன்று விலகுகிறது.
மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.
மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திர்ணாமுல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்களும் தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். மேலும் மத்திய அரசுக்கான ஆதரவையும் திரிணாமுல் காங்கிரஸ் நேற்று விலக்கிக் கொண்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசிலிருந்து காங்கிரஸ் இன்று விலகுகிறது. காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 அமைச்சர்களும் இன்ற் தங்களது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி விலகினாலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு போதுமான இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்?












Click it and Unblock the Notifications