உருவாகிறது தெலுங்கானா மாநிலம்? கூண்டோடு விலகப் போவதாக ராயலசீமா காங். தலைவர்கள் மிரட்டல்
ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிவிடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் கணக்கு.
மேலும் கடந்த ஒருவார காலமாக ஆந்திர மாநில சட்டப்பேரவையை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக் கட்சியினர் முடக்கி வைத்திருக்கின்றனர். தனித் தெலுங்கானா மாநிலம் அமையும்வரை ஆந்திர பேரவையை நடத்தவிடமாட்டோம் என்று கூறிவருகிறது. இதனால் எப்படியும் தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தெலுங்கானாவை எதிர்க்கும் ராயலசீமா பிரதேச காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் கட்சியைவிட தங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம் என்று கூறியுள்ளனர். ராயலசீமா பகுதியை சேர்ந்த 6 அமைச்சர்களானசைலஜாநாத் வெங்கடேசன், முரளி மோகன், சீனிவாசராவ்,அகம துல்பா, தோட்டா நரசிம்மா ஆகியோரும் 32 எம்.எல்.ஏ., 14 எம்.பி.க்களும் ஹைதராபாத்தில் நேற்று திடீரென அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்தோர் அனைவரும் காங்கிரஸிலிருந்து விலகிவிடுவது என்று முடிவெடுத்திருக்கின்றனர். மேலும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications