டிடிடிஏ கம்பெனி சொத்துக்களை சுரண்டுவதாக நெல்லை, தூத்துக்குடி பிஷ்ப்கள் மீது வழக்கு
நெல்லை: டிடிடிஏ கம்பெனி சொத்துக்களை சுரண்டுவதாக நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிருஸ்துதாஸ், தூத்துக்குடி பிஷப் ஜெபசந்திரன் உள்பட 6 பேர் மீது பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை டயோசீஸின் டிரஸ்ட் அசோசியேஷன் நலச்சங்க செயலாளர் எர்னஸ்ட் பாலசிங் பாளை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிருஸ்துதாஸ், தூத்துக்குடி பிஷப் ஜெபசந்திரன், முன்னாள் பிஷப் ஜெயபால் டேவிட், நெல்லை திருமண்டல நிதித்துறை இயக்குனர் ரத்தினராஜ், முன்னாள் பொருளாளர் செல்வின் ஜெயராஜ், தூத்துக்குடி திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் டிடிடிஏ கம்பெனியின் சொத்துகளை கம்பெனியின் சட்டத்திற்கு உட்பட்டு முறையாக பகிர்ந்து கொள்ளாமலும், சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் செய்து வருவதுடன் சிஎஸ்ஐ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பின் கீ்ழ், டிடிடிஏ கம்பெனிக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை கம்பெனி சட்டவிதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களின் அதிகாரத்தை மீறி யாதொரு விதிமுறையையும் பின்பற்றாமல் கூட்டு சதி செய்துள்ள அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாளை போலீசார் விசாரணை நடத்தி பிஷப் கிருஸ்துதாஸ், ஜெபசந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications