30ம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு: வினாத்தாள் அவுட்டாகாமல் இருக்க தீவிர நடிவடிக்கை
நெல்லை: தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடக்கிறது. குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியானதால் வி.ஏ.ஓ. தேர்வை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முழுவதும் வீடியோ எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 1,870 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்விற்காக 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30ம் தேதி இதற்கான தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கு ஹால் டிக்கெட் கடந்த வாரமே தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் கருவூலத்திற்கு வெள்ளிக்கிழமைக்குள் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நாளான்று காலை வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல தாசில்தார்கள், பி.டி.ஓ.க்கள் தலைமையிலான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தாலுகாவிலும் அருகருகே உள்ள 10 மையங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications