குடும்பத்தோடு தலைமறைவான துக்கையாண்டி, மகளுக்கு முன் ஜாமீன் - மனைவிக்கு மறுப்பு!
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் ஏடிஜிபி துக்கையாண்டி, மகளுக்கு முன் ஜாமீன் -மனைவி வழங்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: நில அபகரிப்பு மோசடி புகாரில் சிக்கிய ஏடிஜிபி துக்கையாண்டி மற்றும் அவரது மகள் யாமினி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா மற்றும் சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள் மீதான புகார்கள்.
இந்த வழக்கினால் ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் திடீரென துக்கையாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துக்கையாண்டி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இந்த வழக்கில் பிடிபடாமல் இருக்க தலைமறைவாயினர். இவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டிருந்தன.
இதனிடையே மூவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் துக்கையாண்டி, மகள் யாமினி ஆகியோருக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனால் சுப்புலட்சுமி சரணடைய வேண்டும் அல்லது போலீசாரால் பிடிக்கப்படும் நிலை உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications