சோனியா செலவு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பொய் சொல்கிறார்: நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

ஜாம்நகர்: சோனியா காந்தியின் வெளிநாட்டு பயண விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகரில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

ஹிசார் நகரைச் சேர்ந்த ரமேஷ் சர்மா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய தூதரகங்களிலிருந்து சோனியாவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான தகவல்களைப் பெற்றுள்ளார். இதன்படி, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரசு பல லட்சங்களை செலவு செய்தது தெரியவந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2011-ல் சோனியா லண்டனுக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது முறையே ரூ.2.82 லட்சம் மற்றும் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளன. இதுபோல் சீனாவுக்கு 2 முறை பயணம் மேற்கொண்டதில் முறையே ரூ.14 லட்சமும், ரூ.12 லட்சமும் அரசு செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றார் மோடி.

சோனியாவின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.3 லட்சம் மட்டுமே அரசு செலவு செய்துள்ளதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்காக அரசு செலவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தவறானது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+