இனி வரும் தேர்தல்களில் பாமக தனித்து மட்டுமே போட்டியிடும்: அன்புமணி ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து நெய்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும்தான். காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தருவதில், இரு கட்சிகளுமே மெத்தனமாக செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வு செய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனால் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளை வெறுத்துவிட்ட இளைஞர்கள், தற்போது பாமகவில் இணைந்து வருகின்றனர். இனி வரும் தேர்தலில் பாமக தனித்து மட்டுமே போட்டியிடும் என்றார்.












Click it and Unblock the Notifications