தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு-மின்தடை நேரம் அதிகரிப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது. பல மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே சராசரியாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் அளவு பதிவாகி வருகிறது.
நெல்லையில் நேற்று 105.8 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. நண்பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதே நேரத்தில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காற்று பரவலாக வீசியதால் காற்றாலைகள் மூலம் ஓரளவு மின்சாரம் உற்பத்தியானது. இதனால் இரவு நேர மின்வெட்டு குறைந்தது. இந்த நிலையில் தற்போது வெயில் அதிகரித்து காற்றும் வீசும் வேகமும் குறைந்ததுள்ளது. இதனால் மின்தடை நேரம் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக காற்றாலை மின்உற்பத்தியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்தடை நேரம் மேலும் அதிகரித்துள்ளதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடை கணக்கிட்டால் நேற்று மொத்தம் சுமார் 10 மணிநேரம் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பகலில் மட்டுமின்றி இரவிலும் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். காற்றின் வேகம் குறைந்ததால் தற்போது தினமும் 14 மணி நேரம் மின் விநியோகம் செய்ய முடியாத நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நெல்லை மற்றும் ஈரோடு காற்றாலை மண்டலங்களில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் கூட பெற முடியவில்லை. அதிகாலை மற்றும் காலை வேளைகளில் வீசும் குறைந்த அளவு காற்றின் மூலம் கிடைக்கும் சொற்ப அளவு மின்சாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications