திலகனின் மகன்கள் மிரட்டுகின்றனர் -2வது மனைவியின் மகள் புகார்!

Subscribe to Oneindia Tamil

Thilagan
திருவனந்தபுரம்: வீட்டிலிருந்து வெளியேறும்படி நடிகர் திலகனின் முதல் மனைவியின் மகன்கள் தன்னை மிரட்டுவதாக திலகனின் 2வது மனைவியின் மகள் சோனியா திலகன் திருவனந்தபுரம் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் திலகன். கடந்த வாரம் மரணம் அடைந்தார். அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரையுமே அவர் முறைப்படி திருமணம் செய்யவில்லை.

முதல் மனைவிக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். 2வது மனைவிக்கு சோனியா திலகன் என்ற மகள் மட்டும் உள்ளார். திலகன் கடைசியாக திருவனந்தபுரத்தில் உள்ள 2வது மனைவி மகள் சோனியா வீட்டில் தான் வசித்து வந்தார்.

இந்நிலையில் சோனியா திலகன் திருவனந்தபுரம் கோர்டில் தாக்கல் செய்த மனுவில் நானும் என் தந்தை திலகனும் திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோம். சில தினங்களுக்கு முன் எனது வீட்டுக்கு வந்த திலகனின் முதல் மனைவியின் மகன் கோபி திலகன், என்னை வீடடை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டினார்.

மேலும் திலகனுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பொருட்களை எனது வீட்டில் இருந்து எடுத்து செல்ல முயன்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சோனியா திலகனின் வீட்டில் உள்ள திலகனின் பொருட்களை குறித்த விபரங்களை சேகரிக்க வக்கீல் ஆணையரை நியமிக்க உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த மனு மீதான வழக்கு விசாரணையை 12ம் தேதிக்கு ஓத்தி வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+