நீரை நிறுத்திய கர்நாடகம்.. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 'தடாலடியாகக்' குறைந்தது

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகாவில் உள்ள கபினி அணைகளில் இருந்து கடந்த 29ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 4,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இந் நிலையில், நேற்று மாலை திடீரென்று கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. நீர்ப்பாசன துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் சென்ற 5 மதகுகள் மூடப்பட்டதாக தலைமை செயற்பொறியாளர் விஜயகுமார் கூறினார்.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வினாடிக்கு 10,940 கன அடியாக இருந்த நீர்வரத்து பகல் 12 மணியளவில் 26,313 கன அடியாகவும், பிற்பகல் 4 மணியளவில் 29,926 கன அடியாகவும் அதிகரித்தது.
இந் நிலையில், நேற்று படிப்படியாக நீர்வரத்து குறைந்தது. காலை 8 மணியளவில் 27,379 கன அடியாக குறைந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் மேலும் குறைந்து 16,265 கன அடியாக இருந்தது.
அதே நேரத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக திங்கள்கிழமை காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்:
இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகத்தின் மறு ஆய்வு மனு மீது, காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால், காவிரி ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு மீது முடிவு எடுக்கும்படி பிரதமரிடம் இன்று நேரில் வலியுறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு செய்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications