மு.க.அழகிரி குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன தயாளு அம்மாள்!
மதுரை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ளாராம்.
கிரானைட் மோசடி வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சம்மன் அனுப்பி அழைத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதேபோல துரை தயாநிதியின் மனைவியான அனுஷாவுக்கு, போலீசார் சம்மன் அனுப்பி கடந்த 7ம் தேதி மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். மேலும் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரியிடம் விசாரணை நடத்த மதுரை தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தாயாளு அம்மாள், தனது மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாராம். இந்த நிலையில் இது போன்ற தகவல்களை கேட்ட தயாளு அம்மாள் மனம் கலங்கிப்போனாராம்.
இதனால் பெங்களூவில் இருந்து சென்னை வந்தவர் அடுத்தப்படியாக மதுரைக்கு பயணமாகிவிட்டாராம். மதுரை அருகே உள்ள விக்ரமங்கலம் பகுதியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளதாம். அங்கு சென்ற தயாளு அம்மாள், மு.க.அழகிரி குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளாராம்.
ஏற்கனவே வழக்கு, விசாரணை என்று மனம் நொந்து போன மு.க.அழகிரி குடும்பத்தாருக்கு தயாளு அம்மாள் வருகையும், ஆறுதலும் ரெம்வே தெம்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications