தோள்பட்டையை பிடித்து வெளியே தள்ளிய போலீஸ் இன்ஸ்பெக்டர்- கொந்தளித்த ஜவாஹிருல்லா
சென்னை: தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் போலீசாரால் தாம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் அனைவராலும் மதிக்கக் கூடிய அரசியல்வாதிகளில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் முக்கிய இடம் இருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தவர். தற்போது இராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
அண்மையில் புதிய சபாநாயகராக தனபால் பதவியேற்பு விழாவுக்காக சட்டப்பேரவைக்கு சென்று கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா. ஆனால் போர் நினைவுச் சின்னம் அருகே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாற்று வழியில் சட்ட்டப்பேரவைக்கு சென்றிருக்கிறார். அப்போது மாற்று வழியில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் என்ற இன்ஸ்பெக்டர் ஜவாஹிருல்லாவை உள்ளேவிட மறுத்திருக்கிறார். மேலும் அவரது தோள்பட்டையைப் பிடித்தும் வெளியே தள்ளியிருக்கிறார். இதனால் கொந்தளித்த ஜவாஹிருல்லா புதிய சபாநாயகர் தனபாலிடம் புகார் கொடுத்திருக்கிறார். இது பேரவைச் செயலர் ஜமாலுதீனுக்கு பாஸ் செய்யப்பட்ட் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது ஆஜரான இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனாலும் ஜவாஹிருல்லா விடுவதாக இல்லை.. இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகாராக் கொடுத்திருக்கிறாராம்..!












Click it and Unblock the Notifications