குர்ஷித்தின் அறக்கட்டளை அலுவலகங்களில் உ.பி. போலீஸ் அதிரடி சோதனை
லக்னோ: கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை மோசடியாக நிதி பெற்றது என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். இதையே டிவி டுடேயும் பதிவு செய்து ஒளிபரப்பியது. ஆனாலும் சல்மான் குர்ஷித் தமது அறக்கட்டளை மீதான மோசடி புகார்களை மறுத்து வந்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையும் இது தொடர்பாக நேற்று விசாரணை நடத்தியது. இந்நிலையில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் பொருளாதார குற்றங்களுக்கான பிரிவு இன்று அதிரடியாக சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. உத்தரப்பிரதேசத்தின் 17 மாவட்டங்களில் 4 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. கான்பூர் பகுதியில் 3 குழுக்களும் மீரட் பகுதியில் ஒரு குழுவும் இந்த சோதனையை நடத்துவதாக உ.பி. காவல்துறை அதிகாரி சுப்ரதா திரிபாதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித், இந்த சோதனைகளுக்குப் பிறகு உண்மை தெரியவரும் என்றார். இதேபோல் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவும் வலியுறுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications