3 அமைச்சர்களின் "சைடு சேனல்கள்" பற்றி செய்தி: கருணாநிதியை "அழைக்கிறது" நீதிமன்றம்
சென்னை: தமிழக அமைச்சர்கள் மூவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை "அழைத்திருக்கிறது" நீதிமன்றம்!
தமிழக அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால், கோகுல இந்திரா ஆகியோர் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதியன்று முரசொலி நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதுதான் கருணாநிதியை நீதிமன்றத்துக்கு இப்போது "அழைக்க" காரணமாகியிருக்கிறது!
அப்படி என்ன முரசொலியில் எழுதியிருந்தார்கள்?
"23.8.2012 அன்று முரசொலி பத்திரிகையில் கருணாநிதியின் கேள்வி-பதில் என்ற செய்தி வெளியானது. அதில், வாரப்பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில், பதவி பிரமாணம் குடும்பத்தலைவர் ஏற்றுக்கொண்டாலும், குடும்ப உறுப்பினர்கள் மூலம் பைல்களை க்ளியர் செய்வது நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதியின் தம்பிகள் இரண்டு ஓட்டல்களில் உட்கார்ந்து கொண்டு துறை விஷயங்களை டீல் செய்கிறார். வனத்துறை அமைச்சர் பச்சைமாலுக்கு அவரது மனைவிகள் மற்றும் கோகுல இந்திராவுக்கு அவரது கணவரும்தான் சேனல்கள்' என்று எழுதப்பட்டுள்ளது".
அதாவது வாரப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி கருணாநிதி- கேள்வி பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். அதுதான் இப்போது 'அவதூறாகி' நீதிமன்ற அழைப்புக்கும் காரணமாகி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications