பலத்த மழை... சென்னை, புதுவை, கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த முதல் மிக பலத்த மழை வரை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications