கேரளாவில் 300 டன் வெடிப்பொருள் பறிமுதல்- தென் மாநிலங்களை சீர்குலைக்க சதியா?
நெல்லை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஓட்டி தென் மாநிலங்களில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட சில அமைப்பினர் முயல்வதாகவும், அதற்கு கேரளாவில் வெடி மருந்துகள் சேமிக்கப்படுவதாகவும், சிலருக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கேரளாவில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களை ஓட்டிய குவாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையில் 2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 20 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர்களிடம் விசாரித்த போது எங்கிருந்து, எங்கு செல்கிறது என்று தெரியாது என்று, அவ்வப்போது வரும் தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வாங்கி செல்வோம் என்றனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பல்வேறு குவாரிகள் மற்றும் முக்கிய இடங்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 300 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்துகளை கைப்பற்றினர். அமோனியம் நைட்ரேட், வெடிஉப்பு கலந்த கலவையால் செய்யப்படும் வெடிகுண்டுகள் கல் குவாரிகளில் மலையை உடைக்க, கிணறுகளில் பாறையை உடைக்க பயன்படுத்தலாம்.
அதேபோல அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தில் டீசல், அல்லது மண்ணெண்ணை பயன்படுத்தினால் அது பயங்கரமாக வெடித்து பயங்கர சேதத்தை ஏற்படுத்தும். கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளது.
இதனால் கேரள எல்லையோர பகுதிகளான களியாக்கவிளை, புளியரை, குமுளி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications