ஆக. 22ம் தேதி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி...பன்னீர்செல்வம் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசொலி பத்திரிக்கையில் வெளியான கேள்வி பதில் பாணி அறிக்கையின் மூலம் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவப் பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூறி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,

கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி வெளியான ஒரு வார பத்திரிகையில் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி முரசொலி பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.

வார பத்திரிகை மற்றும் முரசொலி பத்திரிகையில் வந்த செய்தி அவதூறானது.உண்மைக்கு புறம்பானது. தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி செல்வம், வாரப்பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், செய்தியாளர் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+