நிதீஷை மீறி பிகார் சென்ற நரேந்திர மோடி.. அடுத்த பிரதமர் என உற்சாக வரவேற்பு கொடுத்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் சென்று திரும்பியுள்ளார்.

நிதிஷ்- மோடி மோதல் பின்னணி

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாரதிய ஜனதா கூட்டணி அரசாங்க நடைபெற்று வருகிறது. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரோ, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தொடர்ந்தும் எதிர்த்தே வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்தக் கூடாது என்பதை நிதிஷ்குமார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை நரேந்திர மோடி, ஒரு மதவாதி என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார்.

பீகாரில் மோடி

இந்நிலையில் பீகார் மாநில பாஜக மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் ஆளுநருமான கைலாஷ்பதி மிஸ்ரா காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானத்தில் நேற்று பீகார் சென்றார் மோடி. துக்க நிகழ்ச்சிக்காக மோடி சென்றாலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்திருக்கின்றனர்.

நிதிஷுக்கு பதிலடி

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "வருங்கால பிரதமரே வருக" என்று கோஷம் போட்டு அசத்தியுள்ளனர் பாஜகவினர்.

பாட்னாவில் கைலாஷ்பதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார் ன்மோடி. நேற்றுதான் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் பிரம்மாண்ட பேரணியை நிதிஷ்குமார் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+