சசி அண்ணன் போட்ட அவதூறு வழக்கிலிருந்து நக்கீரன் கோபால் விடுதலை

2001ஆம் ஆண்டு நக்கீரன் இதழில் சசிகலா அண்ணன் சுந்தரவதனம் மற்றும் அவரது மனைவி சந்தான லட்சுமி ஆகியோர் அதிமுகவினரிடம் கட்சிப் பதவிக்காக பணம் வசூலிப்பதாகவும், தனது மருமகன் டிடிவி தினகரனை முதல்வராக்குவதற்காக சிறப்பு யாகம் நடத்துவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி அவதூறானது என்று கூறி, சசிகலா அண்ணன், தஞ்சை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நக்கீரன் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தஞ்சை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கும்பகோணம் வழக்கறிஞர் எம்.முரளி ஆகியோர் ஆஜராகி வந்தனர்.
நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களையும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டி காட்டி கடந்த காலத்தில் அதிமுகவில் வலிமைமிக்கவராக இருந்ததையும், அவரை பற்றி நக்கீரனில் வெளியான செய்தி அவதூறானது அல்ல என்பதையும் பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதாடினர். மேலும், இதுபோன்ற வழக்கு பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட தஞ்சை முதலாவது நடுவர் மன்ற நீதிபதி மாலதி, இன்று வழக்கிலிருந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் இணையாசிரியர் காமராஜ் ஆகியோரை விடுவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications