மதுரையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஸ்ரீதர் வாண்டையார் கைது
மதுரை: தேவரின தொண்டர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி விசாரணை கேட்டு நடந்த மறியலின்போது உசிலம்பட்டி பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
தேவர் ஜெயந்தியான கடந்த 30ம் தேதி மதுரையை அடுத்த புளியங்குளம் கிராமத்தில் இருந்து 20 பேர் ஒரு டாடா சுமோ காரில் பசும்பொன் சென்றனர்.
தேவர் ஜெயந்தி விழாவை முடித்துவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோது சிந்தாமணி ரிங்ரோடு அருகே ஒரு கும்பல் அவர்களின் கார் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் மீதும் தீப்பிடித்து.
இதில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் தேவரின கூட்டமைப்பு சார்பில் நேற்று மதுரையில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. மதுரையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பயணிகள் குறைவாகவே பயணம் செய்தனர். கடையடைப்பை முன்னிட்டு, மதுரையில் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட தேவரின கூட்டமைப்பைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications