மனைவியை ஏமாற்றிய டிவி நிருபர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்: 200 பேர் கைது
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனைவியை ஏமாற்றிய டிவி நிருபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில வருடங்களுக்கு சன் டி.வி.யில் க்ரைம் நிருபராகப் பணியாற்றியவர் சாய்காவியன் என்ற இப்ராம் ஷா. இவருக்கும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் காஞ்சனாவிற்கும் கடந்த 2006 அக்டோபர் மாதம் 27-ந் தேதி சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, வரதட்சணையாக 100 பவுன் நகையும், 25 லட்சம் ரூபாய் செலவில் மாதவரத்தில் இரு சக்கர ஷோரூம் ஒன்றும் காஞ்சனாவின் குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு 5 வயதில் தீபேஷ் என்ற மகன் உள்ள நிலையில், திடீரென சாய்காவியன் மாயமானார். இதையடுத்து அவரை பற்றி காஞ்சனா விசாரித்தபோது, ஆலங்குடியை சேர்ந்த கனியாத்தா என்பவரது மகன் இப்ராகிம்ஷா என்றும் அவர் தனது பெயரை சாய்காவியன் என்று மாற்றி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் சாய்காவியனின் அக்காள் கணவர் நிஜாம் என்பவர் தன்னிடம் 75 பவுன் நகைகளை வாங்கி சென்றபோது அவருடன் சென்ற சாய்காவியன் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று புகார் கூறியுள்ள காஞ்சனா, கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கணவரை தேடி ஆலங்குடிக்கு வந்தார். அவருடன் மகன் தீபேஷ், தாய் தனலட்சுமி, தங்கை ஹேமாவதி, தங்கையின் கணவர் சங்கர் ஆகியோர் அவருடன் சென்றனர்.
சாய்காவியன் பற்றி அவரது வீட்டிற்கு சென்று காஞ்சனா விசாரித்தார். சரியான பதில் எதுவும் அவர்கள் கூறவில்லை. இந்த நிலையில் சாய் காவியன் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து சாய்காவியன் வீட்டு முன்பு அமர்ந்து ஒருவாரம் தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார் காஞ்சனா. பின்னர் ஆலங்குடி காவல்நிலையத்தில், காஞ்சனா அளித்த புகாரின் பேரில் இப்ராம்ஷா, அவரது பெற்றோர் இப்ராஹிம் (65), அலிமாம்மாள் (60), உறவினர் நிஜாம்மைதீன் (46) ஆகியோர் மீது ஆலங்குடி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வந்தனர்.
ஒருமாதத்திற்கு மேலாகியும் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications