மோசடியாக 1000 மார்பக அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சஸ்பெண்ட்...!
லண்டன்: 1000 மார்பக அறுவைச் சிகிச்சைகளைச் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த இயான் பீட்டர்சன் என்ற டாக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட பெண்களின் மார்பகத்திலிருந்து சதைப் பகுதியை அவர் எடுத்ததாகவும், ஆபரேஷன் என்ற பெயரில் பல பெண்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியதற்காகவும் அவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
இவரது ஸ்பெஷாலிட்டியே, பெண்களின் மார்பகங்களை அழகுபடுத்தி அவர்களுக்கு அழகான கிளீவேஜை ஏற்படுத்தித் தருவதுதான். குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இவரிடம் மார்பக திருத்த ஆபரேஷன்களை செய்துள்ளனர். இதுபோல கிட்டத்தட்ட 1000 மார்பக ஆபரேஷன்களை இந்த டாக்டர் செய்துள்ளார். கூடவே இப்படி திருட்டுத்தனமாக மார்பக சதையை எடுத்ததால் தற்போது வழக்கில் சிக்கி விட்டார்.
450 பெண்களிடம் இவர், உங்களுக்கு புற்றுநோய் கட்டிகள் இருக்கலாம் என்று மோசடியாக கூறி திருட்டுத்தனமாக சதைப் பகுதியை வெட்டி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரை விரைவில் போலீஸார் விசாரிக்கவுள்ளனர். விசாரணை முடியும் வரை இவர் மருத்துவத் தொழில் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கொண்ட 700 பெண்களிடம் அதைப் போக்குவதாக கூறி ஏதோ ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்துள்ளாராம். இதனால் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்.
இவரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள் தற்போது இழப்பீடு கோரி வழக்குப் போட்டுள்ளனர். இவரது டெக்னிக்கே, தன்னை அணுகும் பெண்களிடம் உங்களது கிளீவேஜை அழகுபடுத்துகிறேன் என்று கூறி மடக்குவாராம். பின்னர் ஆரோக்கியமாக உள்ள பெண்களிடம் தேவையில்லாமல் ஆபரேஷன் செய்து தசைப் பகுதியை அகற்றி விடுவாராம்.
மேலும் இவர் கொடுத்த டேமாக்ஸிபென் என்ற மருந்தால், பலருக்கு முன்கூட்டியே மாதவிடாய் நின்று போய் விட்டதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications