பள்ளிப் பேருந்தில் பயங்கர தீ... 50 குழந்தைகள் காயமின்றி தப்பினர்
விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தனியார்ப் பேருந்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 50 பிள்ளைகளும் பத்திரமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தப் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிவடைந்த பின், பள்ளிக்கூட பஸ்சில் வீடு திரும்புவதற்காக குழந்தைகள் 50 பேர் மற்றும் 4 ஆசிரியர்கள் சென்றனர். பஸ் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி எதிரே வந்த போது, பஸ்சில் 4-வது இருக்கைக்கு கீழே இருந்த பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
உடனே பஸ் டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மேலும் அதிகரிக்க தொடங்கியதால் பஸ் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. புகைக்குள் சிக்கி குழந்தைகள் அலறினார்கள். அங்கிருந்தவர்கள் ஓடோடி சென்று அவர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், விருத்தாசலம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் உள்ள பேட்டரியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு நிகழ இருந்த பெரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் விருத்தாசலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தவேல், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications