காங்கிரஸ் 'ஊழல்', பாஜக 'மோடி', சிபிஐ 'உதவாக்கரை'... இது மக்கள் கருத்து!
பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய வார்த்தைகளைக் கேட்டதும் மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது 'ஊழல்' தான் என்று ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இன்சைட்டோ.காம் மக்களிடம் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய 6 அரசியல் கட்சிகள் குறித்து ஆன்லைனில் ஒரு சர்வே நடத்தியது.
அதாவது அந்த கட்சிகளின் பெயரைக் கேட்டவுடன் தங்கள் நினைவுக்கு வரும் வார்த்தையை மக்கள் தெரிவிக்க வேண்டும். இதில் 2,357 பேர் கலந்து கொண்டனர். அந்த சர்வேயின் முடிவுகள் வருமாறு.

காங்கிரஸ்னா 'ஊழல்'...
காங்கிரஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வந்த வார்த்தை 'ஊழல்'. அடுத்தடுத்து நினைவுக்கு வந்த வார்த்தைகள்: 2ஜி ஊழல், குடும்ப ஊழல், பணம், சோனியா, வேஸ்ட், மோசம், கொள்ளை....

பாஜக என்றாலும் 'ஊழல்'...
பாஜக பெயரைக் கேட்டதும் பலரும் சொன்னதும் 'ஊழல்' தான். அடுத்ததாக மக்களின் நினைவுக்கு வந்தது நரேந்திர மோடி. அடுத்ததாக அவர்கள் கூறிய வார்த்தைகள்: இந்துத்துவம், வாஜ்பாய், பிராடு, மதம், மோசம், பிரதமர். அட ஒருவர் கூட பாஜக தலைவர் கட்காரி பெயரைக் கூறவில்லை.

பகுஜன் சமாஜ்னா 'யானை'
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிப் பெயரைக் கேட்டதும் பலர் கூறிய முதல் வார்த்தை 'யானை' தான். அடுத்ததாக ஊழல், மாயாவதி, சிலை, வேஸ்ட், சாதி, பணம், சுயநலம், தலித் ஆகிய வார்த்தைகளை தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 'உதவாக்கரை'..
இந்த கட்சி பெயரைச் சொன்னதும் பெரும்பாலானவர்கள் கூறிய வார்த்தை 'உதவாக்கரை' என்பது தான். அடுத்ததாக வேஸ்ட், ஊழல், ஒன்னுமில்லை, ஓ.கே., ஸ்டிரைக், கட்சி, கம்யூனிஸம் என்ற வார்த்தைகளைத் தெரிவித்தனர். யாரும் 'உண்டியலைச்' சொல்லவில்லை!.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 'பயனற்றது'..
சிபிஎம் பெயரைக் கேட்டதும் பலர் கூறிய வார்த்தை 'பயனற்றது'. அதன் பிறகு கட்சி, சீனா, போராட்டம், கம்யூனிஸ்ட், சிவப்பு, கொள்கைகள், ஏழை, வங்கம், பந்த், முன்னேற்றம் ஆகிய வார்த்தைகளைத் தெரிவித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் 'குடும்பத் தகராறு'...
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரைக் கேட்டதும் பலர் அது 'வேஸ்ட்' என்றனர். அவர்கள் அடுத்தடுத்து கூறிய வார்த்தைகள்: ஊழல், பவார், காங்கிரஸ், சுயநலம், குடும்பத் தகராறு, சந்தர்ப்பவாதிகள், அதிகாரம், கிரிக்கெட், சரத், மோசம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications