சென்னையிலிருந்து மதுரைக்கு காலியாக சென்ற தீபாவளி சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகையையொட்டி 50க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதையடுத்து கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க மேலும் சில பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, நாகர்கோவிலுக்கு இன்று காலை சிறப்பு ரயில்கள் சென்றன.
மதுரை சிறப்பு ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்வதற்கு வசதியாக முன்பதிவு இல்லாத 15 பொதுப் பெட்டிகளும், முன் பதிவு கொண்ட இருக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியும் என மொத்தம் 22 பெட்டிகள் இருந்தன.
சுமார் 3,000 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகள் மட்டும் நிரம்பின. மற்ற 15 பொதுப் பெட்டிகள் காலியாக இருந்தன. இதில் மொத்தமே 500க்கும் குறைவானவர்களே இருந்தனர்.
காலை 9.20 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்ற இந்த ரயிலில் 15 பொதுப் பெட்டிகளும் காலியாகவே இருந்ததால், அதில் பயணித்த பயணிகள் எழும்பூரிலேயே படுக்கையை விரித்துப் போட்டுக் கொண்டு 'ஹாயாக' மதுரைக்குச் சென்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு இது 'ஸ்பெஷல் டிரெயின்' தான்.
இது ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்த பகல் நேர சிறப்பு ரயில் விடுவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கடந்த வாரமே அறிவித்திருந்தால் பயணிகள் நேற்று முண்டியடித்துக் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டு இன்று காலை வசதியாகவாவது மதுரைக்குச் சென்றிருப்பர். அல்லது இந்த ரயில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது இயக்கியிருந்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலேயே பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிவிட்டதால் இன்று வெளியூர் செல்பவர்களின் கூட்டம் ரயில், பஸ் நிலையங்களில் குறைவாகவே உள்ளது.
நாகர்கோவிலுக்கு பிற்பகல் 2.25 மணிக்கு சிறப்பு ரயில் செல்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications