சென்னைக்கு அருகே புயல் சின்னம்- தமிழகம், புதுவை துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்!

புதிய புயல் சின்னம்
சென்னைக்கு வடகிழக்கில் 1000 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தற்போது சென்னைக்கு அருகே 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆந்திரத்தின் தென்கடலோரம் மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் நாளை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நிலம் புயல்
அந்தமான் கடலில் உருவான தாழ்வு மண்டலம் நிலம் புயலாக மாறி தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டி ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களை பதம் பார்த்திருந்தது. தமிழகத்தில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நிலம் புயலில் மூழ்கிப்போனது. பலர் உயிரிழந்தனர். ஒடிஷா கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
எச்சரிக்கைக் கூண்டுகள்
இந்நிலையில் புதிய புயலை எதிர்கொள்ளும் வகையில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. புதுச்சேரி துறைமுகத்திலும் 1- ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போதைய புயல் சின்னத்தால் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications