இந்திரா, ராஜீவ் காந்தி கொலையாளிகள், கசாபுக்கு வாதாடியவர் தானே ஜேத்மலானி: திக்விஜய் சிங்
டெல்லி: தீவிரவாதிகளுக்காக, கொலைகாரர்களுக்காக வாதாடியவர் தான் பாஜக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்
நிதின் கட்காரியை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி வலியுறுத்தினார்.
அண்மையில் அவர் கூறுகையில்,
ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என்றார்.
இந்நிலையில் ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் யாருக்காகவெல்லாம் வாதாடியுள்ளார் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் பட்டியல் போட்டுள்ளார்.
அவரது டுவீட்:
ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம், இந்திரா காந்தி கொலையாளிகள், ராஜீவ் காந்தி கொலையாளிகள், அப்சல் குரு, பாபா ராம்தேவ் ஆகியோருக்காக வாதாடியுள்ளார் ராம் ஜேத்மலானி. அமித் ஷா, ஹர்ஷத் மேத்தா, கேதன் பாரக், காஷ்மீர் போராளிகள், நரேந்திர மோடி, எதியூரப்பா. பாஜக எம்.பி.யின் சி.வி. அபாரம்.
ராம் ஜேத்மலானி யார் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ராமர் குறித்த அவரது கருத்து கண்டனத்திற்குரியது. அவர் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் கொலையாளிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். மேலும் கசாப், அப்சல் குருவுக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். அப்படிபட்டவரிடம் இருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications