மதுரையில் பிரபல கொள்ளையன் 'மின்னல்' மணி கைது: 133 பவுன் நகை பறிமுதல்

மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் மற்றும் குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் நகை கொள்ளையர்களை குறிவைத்து வலை வீசித் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிமேடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் என்ற மின்னல் மணி மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து முதல் கட்டமாக 26 பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவனிடம் இருந்து 107 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் என்கவுண்டரில் பலியான வெள்ளை ரவியின் கூட்டாளியாக இருந்துள்ளான். அவன் வெள்ளை ரவியின் அண்ணன் மகளை திருமணம் செய்துள்ளான். இதுவரை மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள மின்னல் மணி மீது கொள்ளை, கொலை என 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications