ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை: மக்கள் பீதி
குமரி: ஆர்ல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசயை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தானுமலையான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். நேற்று இரவு அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு்க்கு சென்றுவிட்டார். பூட்டை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த ரூ.4,500 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளது.
இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த காளியான்பிள்ளை, ராஜன் ஆகியோர் வீடுகளிலும் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. மேலும் மெயின் ரோட்டில் உள்ள கரடிமாடசாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சண்முகம்மாள் ஹோட்டலில் புகுந்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இது தவிர செல்லையா பிள்ளை, பாபு ஆகியோரது வீ்டுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் வீட்டில் நகை, பணம் எதுவும சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி சுகாதாரத் துறை ஊழியர் கண்ணன், செருப்புக் கடை நடத்தி வரும் சேக் முகமது, கிரேன் ஆபரேட்டர் ராஜா ஆகிய 3 பேர் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்களை திருட முயன்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் பூட்டியிருந்த வீடுகள், கடைகள், கோவில் உள்ளிட்ட இடங்களில் புகுந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதால் நானுமலையான் புதூர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications