சிபிஐ இயக்குனர் நியமனத்தை நிறுத்த முடியாது: பாஜகவுக்கு பிரதமர் கடிதம்
டெல்லி: சி.பி.ஐ. இயக்குனரின் நியமனத்தை நிறுத்த பாரதிய ஜனதா கட்சி விடுத்த வேண்டுகோளை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துவிட்டார்.
நாட்டின் சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குனராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இது போன்ற உயர் பதவிகளுக்கு லோக்பால் மசோதா தொடர்பான தேர்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவே தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜகவின் சுஷ்மா ஸ்வராக், அருண் ஜேட்லி ஆகியோர் பிரதமருக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தனர். மேலும் சிபிஐ இயக்குனர் நியமனத்தை நிறுத்தி வைக்கவும் அவர்கள் கோரியிருந்தனர்.
இதற்கு பதிலளித்து அருண்ஜேட்லிக்கு பிரதமர் அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில், லோக்பால் மசோதா தொடர்பான மாநிலங்களவை தேர்வுக் குழு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவற்றின் அடிப்படையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் பின்னர் மக்களவையின் ஒப்புதலையும் பெற வேண்டும். அதுவரை சிபிஐ போன்ற முக்கிய அமைப்புக்கு இயக்குனரை நியமிக்காமல் இருப்பது சாத்தியமல்ல என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications