For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தீண்டாமை ஒழிய காதல் மற்றும் கலப்பு திருமணமே சிறந்தது: பாரிவேந்தர்

Google Oneindia Tamil News

Parivendhar
சேலம்: தமிழகத்தில் தீண்டாமை ஒழிய காதல் மற்றும் கலப்பு திருமணமே சிறந்தது என்று ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் கோவிந்தம்பாளையம் கிராமத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் ஏழை, எளிய தலித் பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை ஐ.ஜே.கே. சார்பில் அதன் தலைவர் பாரிவேந்தர் துவக்கி வைத்தார்.

இந்த திருமண விழாவில் தம்பதிக்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கி பாரிவேந்தர் பேசியதாவது,

தமிழகத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் எனில் காதல் மற்றும் கலப்பு திருமணம் நடக்க வேண்டும். காதல் திருமணம் செய்யும் இளைஞர், இளம் பெண்கள் தங்களது பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

தலித் சமுதாய மக்களுக்காக கட்சி ஆரம்பித்தவர்கள் ஓட்டு வங்கியாகவும், தம் வளர்ச்சிக்கும் வழி ஏற்படுத்தி அந்த மக்களை மறந்து விடுகின்றனர்.

தமிழகம் முழுவதும், 1,000 ஏழை தலித் பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சீர் வரிசையுடன், 10 கோடி ரூபாயில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும். அதன் முதல் கட்டமாக தற்போது நான்கு பேருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
IJK chief Parivendhar told that love marriages can eradicate untouchability in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X