Neeya Naana: கல்யாணம் பற்றி ஓபனாக பேசிய திவ்யா கணேஷ்! திகைத்த கோபிநாத்! இந்த புரிதல் பலருக்கு தேவை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மீண்டும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த முறை பேசப்பட்ட தலைப்பு "கல்யாணம் செய்ய பயமா? இல்லை அது அவ்வளவு கஷ்டமில்லையா?" என்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை திவ்யா கணேஷ் பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இளம் தலைமுறையின் பயங்கள்
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே "கல்யாணம் என்றாலே பயம்" என்று கூறிய இளம் தலைமுறை தங்களுடைய அனுபவங்களையும், சுற்றியுள்ள வாழ்க்கையையும் பார்த்து உருவான உணர்வுகளையும் வெளிப்படையாக பகிர்ந்தனர்.
ஒரு பெண் பேசும்போது, "எனக்கு இரண்டு அக்கா. அவர்கள் திருமண வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களை பார்த்த பிறகு, கல்யாணம் என்றாலே பயமாக இருக்கிறது" என்று மனம் திறந்தார். மற்றொரு பெண், "நானும் என் அக்காவும் தான் வீட்டில். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து போய்விட்டால், அம்மா அப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்?" என்ற கவலையை வெளிப்படுத்தினார்.
ஒரு 35 வயது ஆண் கூட, "கல்யாணம் என்பது ஒரு பொறுப்பு. அதற்கான மெச்சூரிட்டி என்னிடம் இருக்கிறதா என இன்னும் எனக்கே சந்தேகம்" என்று உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும், "கல்யாணம் ஆன பிறகு நம்முடைய கனவுகள், வேலை, சுதந்திரம் எல்லாம் முடிந்து குடும்பம் மட்டும் தான் வாழ்க்கையாகிவிடுமோ?" என்ற பயமும் பலரிடையே இருந்தது.
அப்போது ஒரு இளைஞர் தான் போட்டோ கிராபராக இருப்பதாகவும், ஆனால் இப்போதுள்ள பெண்களிடம் பேசும்போது தனக்கு கல்யாணம் செய்யவே பயமாக இருக்கிறது என்று சொன்னார். இதை கேட்டு கோபிநாத் திகைத்துப் போயிட்டார். என்னவென்று இளைஞரிடம் விசாரித்த போது அந்த நபர் கல்யாணத்துக்கு பிறகு வீட்டு வேலையெல்லாம் பாதியாக செய்ய வேண்டும் என்று சொல்லுறாங்க அது எப்படி முடியும் என்று அந்த நபர் கேட்க உடனே கோபி நாத் வார்த்தைகளால் அந்த நபரை பந்தாடி விட்டார்.

ஒருவேளை அந்த பொண்ணு நான் வேலைக்கு போறேன் நீங்க வீட்ல இருந்து வேலை பாருங்கன்னு சொன்னா நீங்க ஓகே சொல்லுவீங்களா என்று கேட்க, அதற்கு அந்த நபர் முடியாது என்று சொன்னதும் கோபிநாத், அது எப்படிங்க? அப்போ அந்த பொண்ணுங்க எதிர்பார்ப்போட இல்ல.. நீங்க தான் எதிர்பார்ப்போட இருக்கீங்க. நான் வேலை செய்வேன். நீ வீட்டு வேலையே அடிமையா செய்யணும் என்னிடம் எந்த பிரஷரையும் கொண்டு வரக்கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க.. அவங்களுக்குன்னு எந்த கனவு இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்க என்று லெப்ட் ரைட் வாங்கி இருந்தார்.
திவ்யா கணேஷ் பளிச்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை திவ்யா கணேஷ் கலந்து கொண்டார். அவரிடம் கோபிநாத் உங்களுக்கு கல்யாணத்தைப் பற்றி பயம் வந்ததா என்று கேட்டார். அதற்கு திவ்யா, "எனக்கு இரண்டு அக்கா. அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் அவர்கள் என்கிட்ட 'கல்யாணம் மட்டும் பண்ணாதே, அது ரொம்ப கஷ்டம்' என்று சொல்லுவார்கள். அதனால் எனக்கும் ஒரு கட்டத்தில் கல்யாணம் என்றாலே பயம் இருந்தது."

வாழ்க்கை துணை
அந்த பயத்திலிருந்து அவர் எப்படி வெளியே வந்தார் என்பதையும் திவ்யா அழகாக பகிர்ந்தார். "நான் தனியாக எங்காவது போகணும் என்றால் ரொம்ப யோசிப்பேன். அந்த இடம் எப்படி இருக்கும்? நான் எப்படி நடந்துக்கணும்? என்ன செய்வேன்? என்று பல கேள்விகள் இருக்கும்
ஆனா அதே இடத்துக்கு என் அப்பாவுடன் போனால்? எந்த தயக்கமும் இருக்காது. ஜாலியாக போய் சந்தோஷமாக திரும்பிவிடுவேன். அதே மாதிரி, வாழ்க்கையில் ஒரு துணை இருந்தால்... அவர்மேல் நம்பிக்கை இருந்தால்... வாழ்க்கையே லைட்டாக மாறிடும். அதனால தான் இப்போ கல்யாணம் பண்ணிக்கணும் என்ற எண்ணம் எனக்குள் வந்திருக்கு" என்று அவர் சொன்னது, நிகழ்ச்சியில் இருந்தவர்களையே சற்று நிம்மதியாக சிந்திக்க வைத்தது.
பிரச்சனைனா சகிக்கணும்னு இல்லை
இங்கேயே திவ்யா பேச்சு இன்னொரு முக்கிய திருப்பத்தை எடுத்தது. ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு பிரச்சனை வந்தால் என்ன செய்வது? என்று கோபிநாத் கேட்ட போது, திவ்யா மிகவும் தைரியமாக,
"பிரச்சனை வந்தால் அதை சகித்து கொண்டே வாழணும் என்பதில்லை. முடியல்னா அந்த உறவிலிருந்து வெளியே வரலாம். அதுவும் தவறில்லை" என்று தெளிவாகக் கூறினார். இந்த ஒரு வரி தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications