'பெப்சி' விளம்பரத்தில் பியான்ஸ்... ரூ. 262 கோடிக்கு ஒப்பந்தமானார்!
நி்யூயார்க்: பிரபல அமெரிக்க பாப் பாடகி பியான்ஸ் மிகப் பெரிய தொகைக்கு பெப்சி நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது 262 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு அவரை பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பியான்ஸை விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதோடு அவரது படத்தையும் பெப்சி பாட்டில்கள், கேன்களில் போட்டு உலகம் பூராவும் விற்பனைக்கு விடவுள்ளதாம் பெப்சி.

எனவே தனது விளம்பரத்திற்கு பியான்ஸை புதிதாக தேர்வு செய்துள்ளது பெப்சி. அதன்படி தனது விளம்பரங்களுக்கு பியான்ஸை பயன்படுத்தும் பெப்சி தனது சில தயாரிப்புகளில் அவரது படத்தையும் பிரசுரித்து வெளியிடவுள்ளது. பியான்ஸ் படம் இடம் பெற்ற இந்த சிறப்பு பாட்டில்களும், கேன்களும் குறிப்பிட்டா காலத்திற்கு உலகம் பூராவும் விற்பனைக்கு விடப்படும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பியான்ஸ் படம் பொறிக்கப்பட்ட பெப்சி குளிர்பானங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அதை பியான்ஸே தொடங்கி வைப்பார். இதற்காக பிரமாண்டமான நிகழ்சசிக்கும் பெப்சி தயாராகி வருகிறது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பியான்ஸின் ஒரு நிகழ்ச்சியையும் ஸ்பான்சர் செய்யப் போகிறது பெப்சி. 2013 தொடக்கத்தில் பியான்ஸ், பெப்சியின் புதிய விளம்பரங்களில் நடிக்கவுள்ளார்.
31 வயதாகும் பியான்ஸ், இசை, வீடியோ, திரைப்படம் என சக கலைகளிலும் கலக்கி வரும் சகலாகலாவல்லி என்பது நினைவிருக்கலாம். 16 கிராமி விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இவரது இசைத் தட்டுக்கள் 10 கோடிக்கும் மேலாக விற்னையாகி சாதனை படைத்துள்ளன. இவரது கணவர் ராப் கலைஞர் ஜே இசட் ஆவார். இசையுலகில் அதிக வருவாய் ஈட்டி வரும் தம்பதி இவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications